சமூக நீதி போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது..!
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் இணைய வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலம் போராட்டத்தில் ஒரு பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.





