--- --:--:-- --

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டிற்கு கத்தியுடன் சென்ற காதலன்..!

8

புதுக்கோட்டையில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டிற்கு கத்தியுடன் சென்ற காதலன் கைது செய்யப்பட்டான். புதுக்கோட்டை சந்தானபுரத்தை சேர்ந்த பெண் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கௌதம் என்பவரை காதலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அந்த பெண் வேறொரு நபரை திருமணம் செய்து கொள்வதாக கௌதமிடம் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த பெண் வேறொரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

 

பெண்ணின் வீட்டில் கத்தியுடன் புகுந்துள்ளான். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதமி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon