தன்னை தானே வாடகைக்கு விட்டு ஆண்டுக்கு 69 லட்சம் சம்பாதிக்கும் நபர்..!
ஜப்பானில் சரிவர வேலை செய்யாததால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் தன்னைத்தானே வாடகைக்கு விடுவதன் மூலம் ஆண்டிற்கு 69 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறா. பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் தவிப்பவர்கள் மோரிட்டோவை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
அப்படி வாடகைக்கு எடுப்பவர்களுடன் உரையாடுவது, வீடியோ காலில் பேசுவது அவர்களுடன் வெளியில் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மோரிட்டோ, ஒருபோதும் பாலியல் ரீதியான அணுகுமுறைக்கு உடன்பட்டதில்லை.
இது குறித்தும் மோரிட்டோ அளித்த பேட்டி ஒன்றில் தமக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் ஏற்பட்ட அழைப்பு வருவதாகவும் இரண்டு முதல் 3 மணி நேரம் வரை ஒருவருடன் நேரத்தை செலவிட 16,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.





