--- --:--:-- --

மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபர்..!

8

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் ஆண் ஒருவர் அந்தரங்க விஷயங்களை கேட்டு தொந்தரவு கொடுத்ததாக பெண் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கணவரிடம் விவாகரத்து பெற்று தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று குழந்தையை கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளார். மேலும் அந்த பெண் தனக்கு தோல் தொடர்பான பிரச்சனை இருந்ததால் பெண் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளார்.

 

பெண் மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த பரிசோதனை செய்யச் சென்றவரிடம் அங்கு பணியில் இருந்தவர் அந்தரங்க விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கதறி அழுதபடி அறையிலிருந்து வெளியேறிய பின் இது ஒரு தலைமை மருத்துவரிடம் புகார் கூறியுள்ளதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார்.

 

தனது புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்று பெண்களிடம் பேச பெண் ஊழியர் என நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon