முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி மனைவியும், திமுக எம்.பி. கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் சென்னை கிரீன் சாலை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகளை செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை முடிந்து இன்று மாலை போல் அவர் வீடு திரும்பவார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.





