--- --:--:-- --

சென்னைக்கு வந்த விமானத்திற்குள் புகைப்பிடித்த பயணியால் பரபரப்பு..!

12

சிங்கப்பூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் புகைபிடித்த சிங்கப்பூர் பயணி காவல்துறையினிடம் ஒப்படைக்கப்பட்டார். சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 182 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.

 

விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தில் பயணம் செய்த சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சுதர்சன் என்ற பயணி விமானத்தில் புகைபிடிக்க தொடங்கினார். இது குறித்து விமான பணிப்பெண் தலைமை விமானியிடம் புகார் அளித்தனர்.

 

உடனே தலைமை விமானம் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் விமானம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பொழுது உடனடியாக விமான நிலைய பாதுகாப்பதிகாரிகள் புகைபிடித்த சிங்கப்பூர் பயனியை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon