--- --:--:-- --

புதிதாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம்.. இடிந்து விழுந்து விபத்து..!

5

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் முதற்கட்டமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

ஆறு மாதங்களாக 5 மாடி கட்டிட பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் நள்ளிரவில் கான்கிரீட் துண்டுகள் சரிந்து மொத்த கட்டடமும் இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் முதற்கட்டமாக 10 பேரை இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர் .

 

மேலும் இடுப்பாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு வந்ததாலயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon