தெருவில் இருப்பவரை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் தெரு நாய் கடித்ததில் 20 நபர்கள் காயமடைந்தனர். வீடுகளில் தெரு நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சாலைகளில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி கடிப்பதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் தெரு நாய் ஒன்று குமாரபாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி துரத்தி கடித்துள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் அவர்களின் 9 நபர்கள் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.






