காவலர்கள் அவதூறாக பேசியதால் இரண்டு மகள்களுடன் தாய் விபரீத முடிவு..!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் பட்டி குருநாதர் குரு பகுதியை சேர்ந்தவர் கல்பனா.
இவர்கள் கணவர் இறந்த ஆண்டுகளுக்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இவரை கைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கல்பனா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கணவரின் உறவினர்கள் அவப்பொழுது கல்பனாவிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து கல்பனா நேற்று மேம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றார். அப்பொழுது காவலர்கள் அவதூறாக பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு இன்று தனது 2 மகள் உடன் வந்த கல்பனா மூன்று பேர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் மற்றும் செவிலியர்கள் அவரை தடுத்தனர்.





