அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம்..!
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் இருக்கும் கூட்டம் ஹரியானாவில் தொடங்குகிறது.
இரண்டு நாள் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர்மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார். இது சைபர் குற்றங்கள், காவல்துறையில் நவீன மயமாக்குதல், குற்றவியல் நீதி அமைப்பு தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, நிர்வாகம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் கடத்தல் பொருட்களை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





