பாசிப்பயறும் ஐஸ்கிரீமும் ஒன்றாக சாப்பிட்டதால் 4 பேர் மயக்கம்..!
பாசிப்பயறும் ஐஸ்கிரீமும் ஒன்றாக சாப்பிட்டதால் உணவே விஷமாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வசித்து வருபவர் ஆனந்த ராவ். இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது குடும்பத்தினர் காலையில் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த பொழுது 4 பேரும் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆம்புலன்சை அழைத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் நீர் 4 பேரும் பாசிப்பயறும் ஐஸ்கிரீம் ஒன்றாக சாப்பிட்டதால் உணவே விஷமாகி 4 பேரும் மயக்கம் ஆனதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





