திடீர் வெள்ளத்தில் இடிந்து விழுந்த வீடு.. அதிர்ச்சியான காட்சி..!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆற்றின் கரையோரத்தில் இருந்த வீடு திடீர் என ஆற்று வெள்ளத்தில் இடிந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது.
ஜூன் நகரில் உள்ள மெண்டல் ஹால் ஆற்றில் பணிப்பாறைகள் நொறுங்கி உருகியதால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கரையோரத்தில் இருந்த வீடு ஆற்றில் இடிந்து விழுந்தது.
நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினார். காலநிலை மாற்றம் காரணமாக உலக அளவில் இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.






