கார் மீது உரசிய அரசு பேருந்து..பறிபோன உயிர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து கார் மீது உரசிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகமது பயாஸ் என்பவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அங்கினாயனப்பள்ளி அருகே சென்ற பொழுது அதிவேகமாக வந்த அரசு பேருந்து முகமது ஃபயாஸின் கார் மீது உரசியுள்ளது, இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புர கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. அப்பொழுது எதிரே வந்த மற்றொரு கார் முகம்மது பையாசின் கார் மீது மோதியுள்ளது.
கார் கண்ணாடி உடைந்து கீழே விழுந்த முகமது பையாசின் 11 வயது மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான். மேலும் காரில் இருந்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.





