அரசு பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
கொலம்பியாவில் அரசு பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 வயது சிறுமி அரசு பேருந்தில் தான் பயணித்த பொழுது உடைமைகள் பறிக்கப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க முற்பட்ட பொழுது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் சமூக வலைதளத்தில் காணொளி வெளியிட்டார்.





