தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..!
ஓசூர் அருகே தலசீமியா மேஜர் நோயால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதால் அவரை அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கிருஷ்ணகிரியில் வசிக்கும் அருள்நாதன் – லலிதா தம்பதியினரின் ஏழு வயது பெண் குழந்தை தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்த குழந்தைக்கு 7 ஆண்டுகளாக முதுகு தண்டுவடம் வழியாக ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குழந்தையின் நோய் குணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அவருக்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் பெற்றோர் வேதனை அடைந்த நிலையில் இதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.





