மத்திய பிரதேசத்தில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. பலியான 8 பேர்..!
மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஹரிதாவில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடிப்பின் அதிர்வு 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சுற்றியுள்ள கட்டடங்களையும் சூழ்ந்தது அடர் புகை. தீ பிழம்புகள் வெளியாகின. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 87 பேர் காயமடைந்தனர்.
லேசான காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்கள் போபால் மற்றும் இந்தூருக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.





