மது போதையால் ஏற்பட்ட தகராறு..இளைஞர் கொலை..!
அணைக்கட்டு அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த கௌதமனுக்கும்.
கூலி தொழிலாளியான கார்த்திக்கும் நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த மாதம் மதுபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்றும் எதேச்சையாக சந்தித்துக் கொண்ட பொழுது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது மது போதையில் இருந்த கார்த்தி, கௌதம் தன் தாயாரை தொலைபேசியில் அழைத்து உனது மகனை கொலை செய்ய போகிறோம் எனக் கூறிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கௌதமனை குத்தியதாக கூறப்படுகிறது. அங்கு சென்று போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






