--- --:--:-- --

காருக்கு வழிவிட சொன்ன பொழுது ஏற்பட்ட தகராறு..!

7

சென்னை புரசைவாக்கம் பகுதியில் பார்க்கிங் திரைப்பட பாடல் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் பங்காரு தெருவில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காமேஷ் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார்.

 

இவர் தனது காரை வெளியே எடுக்க முயன்ற பொழுது மற்றொரு கார் வழியில் இருந்ததாக தெரிகிறது. அந்த காரை எடுக்குமாறு உரிமையாளரிடம் கூறிய நிலையில் சம்பந்தப்பட்ட உரிமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தியுள்ளார்.

 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தாக்குதல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக இருவீட்டாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட காமேஷின் சகோதரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon