--- --:--:-- --

போட்டோ எடுத்த போது ஆபத்தான அலையில் சிக்கிய தம்பதி..!

8

மும்பை ரஃபேல் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். அவரது மனைவி ஜோதி தங்களது குழந்தைகளுடன் கடற்கரைக்கு சென்றுள்ளனர். முகேஷ் – ஜோதி தம்பதி பந்த்ரா கடலில் இருந்த பாறையில் அமர்ந்து போட்டோ ஒன்று எடுத்துக் கொண்டிருந்தனர்.

 

அந்த தம்பதியின் குழந்தைகள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கணவரின் கைகோர்த்தபடி மகிழ்ச்சியாக ஜோதி வீடியோவிற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பெரிய அலை அவர்களை நெருங்கி வந்தபோதே குழந்தைகள் மம்மி மம்மி என்று கத்தி கூச்சலிட்டனர்.

 

ஆனால் அந்த பெரிய அலை முகேஷ் – ஜோதி தம்பதியை இழுத்து சென்றது. முகேஷ் தனது மனைவியின் சேலையை இழுத்து பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் முகேஷின் கால்களை பிடித்து இழுத்து காப்பாற்றினார்.

 

ஆனால் ஜோதியை காப்பாற்ற முடியவில்லை, சடலமாக தான் மீட்கப்பட்டார். இத்தகைய ஆபத்தான விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon