மின் கம்பியில் சிக்கிய மகனை காப்பாற்ற தனது உயிரை இழந்த தந்தை..!
வந்தவாசியில் மின் கம்பியில் சிக்கிய மகனை மீட்ட தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மீரா காதர்ஷா தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம்ஷா.
இவருடைய மகன் அன்சாரி. வீட்டின் மொட்டை மாடி அருகே சென்ற மின் கம்பியில் சிக்கிக்கொண்டார். அன்சாரி மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்த தந்தை இப்ராஹிம்ஷா இதனை பார்த்து பதறிப்போய் மகனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது இப்ராஹிம் ஷாவும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இப்ராஹிம் ஷா மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அன்சாரியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இப்ராஹிம் ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





