--- --:--:-- --

முன்னாள் காதலியுடன் பேசிய சக ஊழியர்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த கொடூரம்..!

7

சென்னை துறைபாக்கத்தில் தனது முன்னாள் காதலியோடு பேசிய ஆத்திரத்தில் சக ஊழியரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெப்சைட் தயாரிக்கும் நிறுவனத்தில் தரன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

 

விடுமுறை தினத்தில் இருவரும் வேலை பார்த்த நிலையில் தரணிதரன் அந்த நிறுவன உரிமையாளர் மீராவை தொடர்பு கொண்டு ஹரிஹரனுக்கும் தனக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் பின்னர் அவர் கீழே விழுந்து எழுந்திருக்கவில்லை எனவும் கூறி இருக்கிறார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்ததில் தரணியின் முன்னாள் காதலியை ஹரிஹரன் காதலித்து வந்த ஆத்திரத்தில் வயிறு மற்றும் நெஞ்சில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவத்தின் பொழுது இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon