--- --:--:-- --

கோழி இறைச்சி கழிவுகளோடு விநியோகம் செய்யப்பட்ட குடிநீர்..!

6

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகராட்சியால் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கோழி இறைச்சிகள் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மாங்காள குப்பம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கிணற்றின் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். பலத்த காற்றில் இந்த கழிவுகள் கிணற்றில் விழுந்துள்ளது.

 

பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் அல்லது கோழி இறகுகள் கலந்து துர்நாற்றத்தோடு தண்ணீரை குடிக்க முடியாத நிலை உள்ளதாக உள்ளது.

 

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதையடுத்து உடனடியாக அதிகாரிகள் கிணற்றை சுற்றி ஆய்வு மேற்கொண்டனர். கிணற்றின் அருகே கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Right Menu Icon