--- --:--:-- --

மும்பையில் காய்கறி விற்கும் பெண்ணுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்!

3

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணும் காவல்துறையினரும் மாறிமாறி தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் பெண் ஒருவர் காய்கறிகளை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

 

சீல் வைக்கப்பட்ட பகுதி என்பதால் வண்டியை எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியபோது விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காய்கறி வண்டியை காவல்துறையினர் கவிழ்த்து விடவே வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்நிலையில் பணியிலிருந்த காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 14 ஆயிரத்து 957 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

 

தடை உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 28 ஆயிரத்து 823 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அபராதமாக ஒரு கோடி 6,74,294 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தேவையின்றி வெளியே சுற்றியதால் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon