காமக்கொடூரனாக மாறிய வேதியல் ஆசிரியர்..!
பள்ளி மாணவி டியூஷன் சென்டருக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாடுதுறை மாவட்டத்தின் அரசு பள்ளி வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி தஞ்சை மாவட்டம் கன்னார்குடியை சேர்ந்த ஆசிரியர் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.





