--- --:--:-- --

கர்நாடகாவில் 60 வயது முதியவர் கொலை..!

6

ர்நாடகாவில் 60 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் ராம்போ மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அக்டோபர் 4ஆம் தேதி 60 வயதான முதியவர் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்து இருந்தனர்.

 

இது தொடர்பாக அவரின் மகள் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வந்தனர். பின்னர் அந்த நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று அருகில் உள்ள வீட்டை பார்த்து குரைத்துள்ளது.

 

போலீசார் அந்த வீட்டில் இருந்தவர்களை விசாரித்தபோது அந்த முதியவரை கொலை செய்தது அவர்கள் தான் என தெரியவந்தது.

 

Right Menu Icon