--- --:--:-- --

33 ஆண்டுகளாக தொடர்ந்து ஆங்கிலத்தில் பெயில் ஆன 51 வயது நபர் கொரொனாவால் பாஸ்..!

8

ஹைதராபாத்தில் 33 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்து வந்த 51 வயது நபர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூறுதீன். இவர் கடந்த 1987ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுதத் துவங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை.

 

அந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடா முயற்சியாக தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தார். கொரொனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் அனைவரும் ஆல் பாஸ் தெலுங்கானா அரசு அறிவித்தது. இதனையடுத்து நூறுதீன் பாஸ் ஆகி விட்டதால் முதலமைச்சர் சந்திரசேகராவுக்கு நன்றி கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon