6 வயது மகன் கண் முன்னே தீயில் கருகிய 5 மாத கர்ப்பிணித் தாய்..!
உடலில் தீ பிடித்து அம்மா எரிந்த பொழுது அலறிக்கொண்டே நீ உள்ளே வராதே வெளியே போய்விடு என்று என்னிடம் கூறினார் என்று அவரது ஆறு வயது மகன் கண்ணீரோடு தெரிவித்துள்ளான்.
சென்னை அடுத்த மறைமலைநகரை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணியான நந்தினியை எரித்து கொலை செய்ததாக அவரது கணவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து தெரிவித்த அவரது 6 வயது மகன் அம்மாவை அப்பா கிரிக்கெட் பேட்டால் அடித்து தீ வைத்தார். அப்பொழுது எனது வாயை பொத்தி அப்பா வெளியே கூட்டி வந்து விட்டார் என சிறுவன் தெரிவித்தான்.






