பொள்ளாச்சி பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம்.தரகர் உள்பட மூன்று பேர் கைது !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகவேல்.அவரது மனைவி சுதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
முருகவேல் மாற்றுத்திறனாளி என்பதால் குழந்தையை வளர்க்க சிரமம் உள்ளதாக நினைத்து குழந்தையை விற்க முயன்று உள்ளார். இதை எடுத்து
ஆழியார் புளியங்கண்டி பகுதியை சேர்ந்த பௌலினா என்ற பெண்ணிடம் கூறியுள்ளார் முருகவேல்.
குழந்தை விற்பனைக்கு இடைத்தரகராக இருந்த ஆழியார் புளியங்கண்டி பகுதியை சேர்ந்த பௌலினா,கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், அவரது மனைவி கோகிலா திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததை அறிந்த பௌலினா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளனர் அதற்காக ரூபாய் 80 ஆயிரத்தை பெற்றுக்கோண்டு குழந்தையை கொடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக கோவை குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி ஆழியார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கோவை செட்டிபாளையத்தில் உள்ள ராஜேஷ்குமார் – கோகிலா தம்பதியரிடம் இருந்த குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதையடுத்து ராஜேஷ்குமார் – கோகிலா தம்பதியினர் மற்றும் உடந்தையாக இருந்த பௌலினா உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







