--- --:--:-- --

எல்லையில் சீனா படைகளை குவித்து வருவது ஒப்பந்தத்திற்கு எதிரானது..!

1.1

ல்லையில் சீனா படைகளை குவித்து வருவது இந்தியா-சீனா இடையேயான ஒப்பந்தத்திற்கு எதிரானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கீயை சந்தித்துப் பேசினார்.

 

இந்த சந்திப்பின் போது இந்தியா தெரிவித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும் எல்லையில் அமைதியை ஏற்படுத்தினால் மட்டுமே உறவு மேம்படும் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் எல்லையில் சீனா படைகளை குவித்து வருவது இந்தியா – சீனா இடையேயான ஒப்பந்தத்திற்கு எதிரானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் அத்துமீறலை இந்தியா கண்டித்த நிலையில் இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையை தீர்க்க ஐந்து அம்சத் திட்டங்களுக்கு இரு நாடுகளும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டனர். எல்லைகளை நிர்வகிப்பது அமைதியை ஏற்படுத்த ஒப்பந்தங்கள் மற்றும் நெறி முறைகளை பின்பற்றுதல் குறித்த வெளிப்படையான ஐந்து அம்சத் திட்டங்கள் குறித்து இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

Leave a Reply

Right Menu Icon