--- --:--:-- --

பெற்றோர் திட்டிய மன உளைச்சலில் 12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை..!

10

பெற்றோர் திட்டிய மன உளைச்சலில் 12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரம் பக்கத்தைச் சேர்ந்த தம்பதி ரிச்சட் – மீனா தம்பதிக்கு 12 வயதில் தோனி என்ற மகன் இருந்த நிலையில் அவர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்த பள்ளிக்கு செல்ல மறுத்தும் படிப்பின் மீது ஈடுபாடு இல்லாமலும் மகன் இருந்ததால் அவரை தம்பதி இருவரும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிறுவன் வீட்டு கழிவறையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதனிடைய சம்பவம் குறித்தான விசாரணையை கையில் எடுத்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வீட்டருகே உள்ள பெட்ரோல் பங்கில் மர்ம நபர் ஒருவருடன் பைக்கில் வந்து இறங்கிய சிறுவன் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றது பதிவாகி இருந்தது.

 

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரவி வரும் நிலையில் சிறுவனை பைக்கில் அழைத்து வந்த அந்த நபர் யார் எனவும் சிறுவனுக்கு வாட்டர் கேனில் ஊழியர்கள் பெட்ரோல் கொடுத்தது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon