--- --:--:-- --

கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரதமர் மோடி தலைமையில் யோகா தினம் கொண்டாட்டம்..!

1

சர்வதேச யோகா தினத்தையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரில் பிரதமர் மோடி யோகாசனம் செய்தார். 8வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

 

அப்போது சுமார் 15000 பேருடன் இணைந்து அவருடன் யோகாசனம் செய்தார். மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் சுய சிந்தனையை மேம்படுத்தவும் யோகா உதவுகிறது என்றார்.

 

யோகா தனிநபருக்கு மட்டுமல்ல நமது நாட்டிற்கும் உலகிற்கும் அமைதியை கொண்டு வருகிறது என்றும் நமக்குள் இருக்கும் அனைத்தையும் உணர்த்துகிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon