ரிக்க்ஷாவில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய காவலர்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிக்ஷாவில் இருந்து தவறி விழுந்த குழந்தையை போக்குவரத்து காவலர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரத்திலுள்ள சீமா ஷாப் பகுதியில் ரிக்ஷா ஒன்று வளைவில் திரும்பும் போது அதில் பயணித்த குழந்தை திடீரென சாலையில் விழுந்துள்ளது.
அப்பொழுது உடனடியாக சாலையின் குறுக்கே பாய்ந்து சென்ற போக்குவரத்து காவலர் அந்த வழியாக வந்த பேருந்தை தடுத்தார். மேலும் குழந்தையை பத்திரமாக மீட்டு அவர் உடனடியாக தாயிடம் ஒப்படைத்தார். போக்குவரத்து காவலரின் துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






