--- --:--:-- --

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி..!

1

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று ஆஜராக உள்ளார். அதே நேரத்தில் அமலாக்க துறையை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பங்கு மடையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக புகார் எழுந்தது.

 

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டில் இருந்ததால் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் ஆஜராகாத ராகுல்காந்தி இன்றைய தினம் விசாரணைக்கு செல்ல இருக்கிறார்.

 

டெல்லியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற உள்ளது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி அதன் பின்னணியில் ஆளும் பாஜக அரசு இருப்பதாகவும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் இன்று பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அந்த கட்சி அறிவித்துள்ளது. அதன்படி சென்னையிலும் அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

 

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நுங்கம்பாக்கம் ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதற்கு ஏற்ப வாகன ஓட்டிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Right Menu Icon