அனிருத்தை திருமணம் செய்வேன் எனக்கூறிய பிரபலம்..!
பிரபல பாடகியாக இருக்கும் ஜொனிதா காந்தி தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடி வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழில் பார்ட்டி, செல்லமா போன்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது. எனவே அந்த பாடல்களை ஜொனிதா, அனிருத். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பாடுவார்கள்.
அதனால் ரசிகர்களிடையே இவர்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. இதனால் இவர்களின் ஜோடிப்பொருத்தம் செமையாக இருக்கிறது எனவும் இது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் பல கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.
விழாவில் கலந்து கொண்ட பொழுது ரன்வீர் சிங், சூர்யா மற்றும் அனிருத் இவர்களில் யாரைத் திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்வி கேட்ட பொழுது தான் அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன் ஏனென்றால் அவருக்கு தான் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லி அதை நகைச்சுவையான பதிலை கூறியிருந்தார்.






