--- --:--:-- --

புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25 ம் தேதி பதவியேற்பார்..!

10

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும் ஜூலை 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது குடியரசு தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதி முடிவடைகிறது.

 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நாட்டின் 11-வது குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும் ஜூலை 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவித்தார்.

 

வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் எனவும் வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29ஆம் தேதி கடைசிநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் 776 எம்பிக்கள், 4 ஆயிரத்து 33 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேர் வாக்களிக்க உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon