--- --:--:-- --

இந்தியா- வியட்நாம் பாதுகாப்புத்துறை அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை..!

1

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்னாம் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

 

இந்தியா வியட்நாம் பாதுகாப்பு தொடர்பான கூட்டு தொலைநோக்கு அறிக்கையில் இரு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர். வியட்நாம் பாதுகாப்பு துறைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இந்தியா வழங்குவதற்காக இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரப்பட்டது.

 

வியட்னாம் பாதுகாப்புப் படையினருக்கான விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு இந்தியா சார்பில் உதவி செய்யப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon