--- --:--:-- --

வீட்டின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண் குழந்தை..!

7

கும்பகோணத்தில் வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெசன்ட் ரோட்டில் ராஜா என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

 

அந்த வீட்டிற்கு அருகிலேயே அவரது உறவினர் வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு ராஜாவின் குழந்தை கோபிகா சென்றுள்ளார். அவர் குளிக்க சிறிது நேரத்தில் கதவின் தாழ்ப்பாளை திறந்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியிலிருந்து குழந்தை விளையாடியுள்ளார்.

 

அப்பொழுது பாதுகாப்பு கம்பியில் ஏறி விளையாடிய பொழுது அங்கிருந்து கீழே விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி செய்து செய்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது.

 

Right Menu Icon