தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்..!
புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் தாக்கியதில் பல இடங்களில் தென்னை மரங்கள் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.
புதுச்சேரி நகர பகுதிகளான முருகம்பக்கம், மரப்பாலம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தட்டாஞ்சாவடி, இந்திராநகர் உட்பட பல பகுதிகளில் சூறை காற்றுடன் கன மழை வெளுத்து வாங்கியது. மழையின் போது மின்னல் தாக்கியதில் பல இடங்களில் தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தது.






