--- --:--:-- --

திருமணத்தை உடலில் தீ வைத்து கொண்டாடிய நபர்கள்..!

6

காதல் தீயில் உள்ளம் உருகிய ஹாலிவுட்டில் ஸ்டண்ட் வீரர்களுக்கு திருமண முடித்திருக்கிறது. ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் ஆக பணியாற்றி வரும் காதல் ஜோடி உடலில் தீ வைத்து திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

 

இருவரும் காதலித்து வந்த நிலையில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து தேவாலயத்தில் திருமணத்தை முடித்து வெளியே வந்த இருவர் உடல்மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்பு சாகசம் புரிந்தனர்.

 

உரிய பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிகழ்வு மிகவும் பயிற்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும் யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon