--- --:--:-- --

டெல்லி தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

5

டெல்லியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மூன்று மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடத்தில் தான் இந்த விபத்து நேர்ந்தது. மாலை 4:30 மணியளவில் வணிக வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

 

தகவல் அறிந்ததும் 24 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதற்கு அடுத்தடுத்த தளங்களுக்கு மளமளவென தீ பரவியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். கட்டுக்கடங்காமல் தீ பரவியதில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.

 

70 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுதாகவும் தீக்காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon