கார் ஜன்னல் வழியாக வழியாக உடலை நீட்டி சாகச பயணம்..!
கொடைக்கானலில் கார், ஜன்னல் வழியாக உடலை நீட்டிய படி வலம் வரும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானலில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர்.
சிலர் ஜன்னல்களுக்கு வெளியே நீட்டியபடி பயணிப்பதால் மற்றவர்கள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





