பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்..!
நைஜீரியாவில் இருந்து பிரிட்டன் வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை ஒரு அரிய வகை வைரஸ் தொற்று ஆக உள்ள நிலையில் இது மனிதர்கள் இடையே பரவாது என பிரிட்டன் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் சில வாரங்களில் குணமடையும். இருப்பினும் சில நேரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மையால் பாதித்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
குரங்கிலிருந்து பரவும் அம்மை நோய் பிரிட்டனில் முதன்முதலில் 2018ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




