நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிப்பு..!
இலங்கையில் பல இடங்களில் வன்முறை வெடித்ததால் அசாதாரண சூழல் நிலவுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டி அடித்தனர். .போராட்டக்காரர்கள் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. இலங்கை முழுவதும் பாதுகாப்பிற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள உத்தரவை நாளை காலை 7 மணி வரை நீட்டித்து அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




