--- --:--:-- --

மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு..!

6

கடலூர் மாவட்டம் ராமநத்ததில் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெரம்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் – அனிதா தம்பதியினருக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது.

 

மீண்டும் கர்ப்பம் தரித்த நிலையில் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிய முயன்றுள்ளனர். இதில் மூன்றாவதாக பெண் குழந்தைதான் பிறக்கும் என தெரியவந்ததால் அவர் கருகலைப்பு செய்துள்ளார். மயக்கத்தில் இருந்ததாகவும், ரத்தப்போக்கு ஆகியதால் கணவர் கூச்சலிட்டு உள்ளார்.

 

அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது இரண்டு நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் அவர் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon