பரோட்டோவுக்குள் கிடந்த பாம்பு சட்டை..!
கேரளாவில் உணவு பார்சலில் பாம்பு சட்டை கிடந்ததால் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். காசர்கோடு அருகே ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் கடும் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நெடுமங்காடு பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் பெண் ஒருவர் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளுக்காக பரோட்டா பார்சல் வாங்கியுள்ளார்.
சிறுமி பரோட்டா சாப்பிட பார்சலை பிரித்து பார்த்த போது உள்ளே பாம்பு சட்டையின் துண்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்து சிறுமி கத்தியுள்ளார்.
பரோட்டா பார்சலில் பாம்பு சட்டை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து நெடுமங்காடு நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இந்த கடையை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





