விஜய்யுடன் போட்டோ எடுத்த குக் வித் கோமாளி சிவாங்கி..!
விஜய்யின் பீஸ்ட் படத்தில் வரும் ஜாலியா ஜிம்கானா பாடல் அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. அந்த பாடல் படமாக்கப்ட்ட போது செட்டில் நடந்த ஜாலியான சம்பவங்களை பட ரிலீசுக்கு முன்பே ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். படத்தின் இறுதியில் வரும் இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜாலியோ ஜிம்கானா ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் உடன் சிவகார்த்திகேயனின் டான் படக்குழுவினர் சந்தித்து இருக்கின்றனர்.
அங்கு எடுத்த போட்டோவை குக் வித் கோமாளி நடிகை சிவாங்கி வெளியிட்டு இருக்கிறார். ஜாலியோ ஜிம்கானா செட்டில் இது நடந்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தளபதி. சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது” என சிவாங்கி கூறி இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




