--- --:--:-- --

விவேக் பெயரில் சாலை அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை..!

4

டிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் விவேக்கின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக்.

 

நகைச்சுவை காட்சிகளிலும், பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மரணமடைந்தார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

சமீபத்தில் அவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Right Menu Icon