--- --:--:-- --

இமயமலையில் 14,000 அடி உயரம் ஏறிய ஆட்டிசம் பாதித்த சிறுவன்..!

3

கோவையை சேர்ந்த ஆட்டிஸம் பாதித்த 12 வயது சிறுவன் இமயமலை தொடர்களில் ஒன்றான பீஸ்ட்குண்டு மலையில் 14,000 அடி உயரம் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். 2வது வயதில் ஆட்டிசம் இருப்பதை கண்டறிந்த பெற்றோர் அவருக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வந்தனர்.

 

தொடர் பயிற்சிகள் எடுத்து சிகரம் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் இமயமலைப் பகுதிகளில் வழக்கமாகச் செல்லும் குடும்ப நண்பரான ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்ற பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ்கோ மலையில் பயிற்சியாளர் உடன் தொடங்கிய சிறுவன் நான்கு நாட்களில் 14,000 அடி உயரத்துக்கு அசத்தினார். அங்கு இந்திய தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

இதன்மூலம் இமயமலைத் தொடர்களில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டு 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon