வைரமுத்துவிற்கு சொந்தமான திருமண மண்டபத்தை சீல் வைக்க வந்த அதிகாரிகள்.!
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க வந்த நிலையில் உடனடியாக வரி செலுத்தப்பட்டது.
இந்த மண்டபத்திற்கு கடந்த நான்கு வருடங்களாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய எட்டு லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சொத்துவரி செலுத்தப்படாமல் இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உடனடியாக வரி செலுத்தப்பட்ட நிலையில் சீல் வைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





