திடீரென்று வெடித்த கேஸ் சிலிண்டர்..!
திண்டிவனத்தில் கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. பெண் ஒருவர் திண்டிவனம் சாலையில் தள்ளுவண்டியில் டிபன் விற்பனை செய்து வருகிறார். உணவு தயாரிப்பதற்காக கையில் வைத்துள்ள பாலம் அருகே கடையை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அந்த கடையில் உணவு தயாரிப்பதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பெண் பயந்து கொண்டு வெளியே ஓடி வந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





